Rock Fort Times
Online News

பழனி முருகன் கோவிலில் ஏப்ரல் 11, 12 மற்றும் 13 தேதிகளில் கட்டண தரிசனம் ரத்து…- அமைச்சர் சேகர் பாபு…!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் இந்த விழா நடைபெறும். விழாவின் முக்கிய அம்சமாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை கல்யாண வைபவம் ஏப் 11ம் தேதியும், பங்குனி உத்திர திருத்தேரோட்டம் அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ஏப்.14ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தினமும் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில்
கோவிலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் வசதிக்காகவும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப். 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தமிழக சட்டசபையில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்