அதிமுகவில் பயணித்து வந்த மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டபோது, பன்னீர் செல்வம் அணியில் இணைந்து பயணித்தார். ஆனால், ஓபிஎஸ் அணியிலும் அதிருப்தியில் இருந்து வந்த அவர் தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும், தவெக தலைவர் விஜய் ஆதரவு நிலைப்பாட்டுடன் பதிவுகளை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், இன்று( செப்.19) திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் மருது அழகுராஜ். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது நினைவு கொள்ளத்தக்கது. இவர் நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும் ஆவார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஆக்கிரமித்துள்ளார். ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார். ஒற்றை தலைமை ஜனநாயகத்துக்கு எதிரானது. எடப்பாடி அவமதிப்பு அரசியலை செய்கிறார். அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைப்பு அரசியலில் இணைந்துள்ளேன். திமுகவில் உழைக்க வந்துள்ளேன்; இன்னும் பல பேர் திமுகவில் இணைய உள்ளனர் என்று கூறினார்.
Comments are closed.