Rock Fort Times
Online News

ஆஸ்கார் 2026: தகுதிப் பட்டியலில் இடம்பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’…!

சினிமா துறையில் சாதனை படைப்பவர்களுக்கு மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருது பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டிற்கான 98-வது ஆஸ்கார் விருது விழா, மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்கார் விருதுக்கு தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை அகாடமி வெளியிட்டுள்ளது. இதில், சிறந்த திரைப்படப் பிரிவில் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா, அத்தியாயம் 1’, அனுபம் கெர் இயக்கிய ‘தன்வி தி கிரேட்’ ஆகிய படங்கள் இப்போட்டியில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. தமிழில் இருந்து சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கிய ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பதிவாக அனுப்பப்பட்டு, தற்போது 15 படங்களைக் கொண்ட சுருக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளது. “மகாவதார் நரசிம்மா” படம் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் இடம் பெற்றுள்ளது. ராதிகா ஆப்தே நடித்த சிஸ்டர் மிட்நைட் படம், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பொதுப் பிரிவுகளில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்