திருவெறும்பூரில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து காட்டூர், திருவெறும்பூர், பொன்மலை மற்றும் திருவெறும்பூர் தெற்கு, வடக்கு ஒன்றியங்கள், துவாக்குடி நகரம், கூத்தைப்பார் , பேரூர் ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் . அப்போது ஒவ்வொரு வீடாக சென்று மத்திய அரசின் வஞ்சகத்தையும், திராவிட மாடல் அரசின் திட்டங்களையும் எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையில் நிர்வாகிகள ஈடுபட்டனர். இதில், கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், தொகுதி பொறுப்பாளர் மணிராஜ், மாவட்டக் கழக நிர்வாகிகள் கே.என்.சேகரன், செங்குட்டுவன், பகுதிகழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், சிவா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
Comments are closed.