அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் நேற்று இரவு காலமானார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் உடல்நலம் பாதித்து தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு அவரது தாயார் உடல்நிலை மிகவும் மோசமானதால், மருத்துவமனையில் இருந்து அவரை பெரியகுளத்தில் உள்ள இல்லத்திற்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். நேற்றிறவு 10.30 மணியளவில் அவரது தாயாா் உயிா் பிாிந்தது. தாயார் இறந்த செய்தி ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் சென்னையில் இருந்து பெரியகுளத்திற்கு புறப்பட்டு வந்தாா். ஓ.பன்னீா்செல்வம் தனது தாயாாின் மறைவு தாங்காமல் அவாின் கால்களை பிடித்துகொண்டு கண்ணீா் விட்டு கதறி அழுதாா். அவரது தாயாாின் இறுதிச்சடங்கு பொியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று நடக்கிறது. இறந்த பழனியம்மாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். ஓ.பன்னீா்செல்வத்தின் தாயாா் இறப்பிற்க்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டா் பக்கத்தில் இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வத்திற்க்கு இத்துயர்மிகு தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட் செய்துள்ளார்.
1 Comment
Leave A Reply

**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.