வளர்ச்சி அடைந்த ஊராட்சிகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று(13-01-2025) திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்டகுண்டூர் ஊராட்சியை
மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவளர்ச்சிபட்டி, ஐயம்பட்டி, அயன்புத்தூர், பர்மா காலனி உட்பட 5 கிராம மக்கள் புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பொது மக்களின் போராட்டம் காரணமாக புதுக்கோட்டை- திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.