திருச்சி மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன் தெருவில் 4 வயது குழந்தை உட்பட மூன்று பேர் திடீரென உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்பிற்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்தது தான் காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இச்சூழலில் தமிழக அரசை கண்டித்து அதிமுக பொது செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்., அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., ” திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது. 15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர். மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரை கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன் ? உடனடியாக இந்த உயிரிழப்பிற்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் குடிநீரை சுகாதாரமும் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் அது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.