Rock Fort Times
Online News

திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் – அமைச்சர் கே.என்.நேரு காட்டமான பதிலடி!

திமுக அரசு மீது அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வபோது பதில் அளித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் எந்த துறை மீதான விமர்சனமோ அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கின்றனர். எஸ்.ரகுபதி, சேகர் பாபு ,செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பதிர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்ரநேருவும் தற்போது எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்., எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய 20 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற பொய் குற்றச்சாட்டை ஆதாரத்தோடு மறுத்து, 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என சிவகங்கையில் நடைபெற்ற விழாவில், புள்ளி விவரத்தோடு பதில் அளித்து பேசினார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.எடப்பாடி பழனிசாமியின் பொய் முகத்தை முதல்வர் மு. க ஸ்டாலின் தனது பதில்களால் கிழித்தெறிந்துள்ளார். இதனால் தமிழ்நாட்டு மக்கள் முன் பழனிசாமியின் போய் அம்பலப்பட்டு விட்டது. எனவே,ஆட்சிக்கு வரும் முன் புகார் பெட்டி வைத்து திமுக பெற்ற மனுக்கள் நிலை என்னவென்று தெரியவில்லை ? என புதிய பொய்யை இன்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற 100 நாட்களில் தேர்தல் பரப்புரையின்போது பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார். அதேபோன்று 2021ம் ஆண்டு மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் குறைகள் மீது உரிய தீர்வு காண ‘ உங்கள் தொகுதி முதலமைச்சர் ‘ என்று தனித்துறையை உருவாக்கி உத்தரவிட்டார். கொரோனா போன்ற பெரும் தொற்று காலத்திலும் அனைத்து மனுகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு 100 நாட்கள் முடிவில் 2.9 லட்சம் மனுக்கள் ஏற்ப்பளிக்கப்பட்டு உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்ந்தன. பல்லாண்டுகளாக தீர்த்து வைக்கப்படாமல் இருந்த பல குறைகள் குறுகிய காலத்தில் தீர்த்து வைக்கப்பட்டன. இவை எல்லாம் தெரியாதது போல நடிக்கும் பழனிசாமி இன்று புகார் பெட்டியில் பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது என பொய் பேச கிளம்பி விட்டார். ஊர்ந்து ஊர்ந்து பழக்கப்பட்ட பழனிசாமி சமீப காலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய் தாவித்தாவி செல்ல பழகிக் கொண்டிருக்கிறார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்பது பழனிசாமிக்கு தான் கச்சிதமாக பொருந்தும்.
முதல்வரின் முகவரி துறையின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதெல்லாம் தெரியாமல் பழனிசாமி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசி இருக்கிறார். தூத்துக்குடி மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்கக்கூட மனமின்றி கருணை இல்லாமல் 13 அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்ற அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திராவிட மாடல் ஆட்சி மீது குறை சொல்ல எந்த அறுகதையும் இல்லை. சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற வழியில் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம் போன்ற முக்கியமான தேர்தல் அறிவிப்புகளில் பெரும்பான்மையானவற்றை நிறைவேற்றியதோடு, தேர்தல் அறிக்கையில் சொல்லாத புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு திட்டங்களையும், முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது. எனவே பழனிசாமியின் இந்த பச்சை பொய்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். மக்கள் நலனுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் வழி நடத்தி வரும் முதலமைச்சர் மீதும் திராவிட மாடல் நல்லாட்சி மீதும் அவதூறு பரப்ப அதிமுக போடும் கணக்குகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தவிடு பொடி ஆக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்