திருச்சி காந்தி மார்க்கெட் டைலர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). சாப்ட்வேர் இன்ஜினியர் . கடந்த ஜூன் 27 ம் தேதி இவா் செல்போனிற்கு தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் , தான் அமேசன் நிறுவனத்தில் வேலை பாா்ப்பதாகவும், பகுதி நேர வேலையாக சிறு தொகை முதலீடு செய்து அதிக கமிஷன் பெற்று வருவதாகவும் கூறினார். பின்னர் ஒரு யூ டியூப் வீடியோவை அனுப்பி அதை டவுன்லோடு செய்து ரூ.1000 செலுத்தினால் உடனடியாக ரூ. 150 உடனடி கமிஷனாக உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும் என்று தெரிவித்துள்ளார். அதை நம்பிய பிரவீனும் அதிக லாபம் கருதி குறிப்பிட்ட வெப்சைட்டுக்கு சென்று ரூபாய் 15 ஆயிரத்து 600 முதலில் முதலீடு செய்தார் . இதை அடுத்து கமிஷனாக ரூ. 21 ஆயிரத்து 870 கமிஷனாக கிடைத்தது. அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களில் ரூ. 8 லட்சத்து 72 ஆயிரத்து 800 முதலீடு செய்தார். அதன் பின்னர் கமிஷன் கணக்கில் சேரவில்லை. முதலீடு தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பிரவீன் ஆன்லைன் வாயிலாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தாா். இந்த புகாாின் போில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.