திமுக கூட்டணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய வரவாக இணைந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தேமுதிக சார்பில் சுதீஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு நான்கு உறுப்பினர் பதவி கிடைக்க உள்ள நிலையில் ஒரு உறுப்பினர் பதவி தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினர் ஆக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Comments are closed.