Rock Fort Times
Online News

ஒரு எம்பி -ஒரு ஐடியா கருத்து தர மே 12 ஆம்தேதி கடைசி : லட்சத்தில் பரிசு பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில், ‘ஒரு எம்.பி – ஒரு ஐடியா’ என்ற செயலாக்கத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள திறனாளர்கள் சிறந்த யோசனையை கருத்துருவாக தரலாம். கல்வித்திறன், ஆரோக்கியம், குடிநீர் மற்றும் சுகாதாரம், குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை, எரிசக்தி, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் சமூகசேவை போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகள் காணும் பொருட்டு ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தரலாம். தொடர்பான கருத்தாக்கங்கள் பெறபட்டு அதில், தேர்வு செய்யப்படும் முதல் 3 நபர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும். அதாவது,முறையே ரூ.2,50,000/, ரூ.1,50,000/- மற்றும் ரூ.1,00,000/- வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு மாநிலம் முழுவதும் தகுதியான நபர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற்று பரிசு பெற்றிட மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா 2022-2023 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து பரிந்துரை செய்துள்ளார். எனவே, மேற்கண்ட இனங்களில் புதுமையான மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வுகள் குறித்த கருத்துருக்களை சமர்ப்பிக்க விரும்புவோர், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் இணையதளத்தில் (www.mplads.gov.in) தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, விரிவான அறிக்கை தயார் செய்து கடந்த 31.03.2023 தேதிக்குள் “இணை இயக்குநர் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருச்சிராப்பள்ளி 620 001″ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கருத்துருக்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனவே, கருத்துருக்களை 12.05.2023 தேதிக்குள் ”இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருச்சிராப்பள்ளி 620 001” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் . இவ்வாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்