திருச்சி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு பழுதாகியுள்ளதால் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி முடிவடைய அதிகபட்சமாக 2 மாதம் தேவைப்படுவதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் குடிநீர் உந்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில் நகர், முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு, மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், விவேகனந்தர் நகர், கீழகல்கண்டார் கோட்டை, அம்பேத்கர் நகர், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், தெற்கு உக்கடை, திருவெறும்பூர், வள்ளுவர் நகர், பழைய எல்லக்குடி, ஆலத்தூர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 35 மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் பொன்மலைப்பட்டி மற்றும் சுப்ரமணிய நகர் தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளிலிருந்து வழங்கப்படும் மத்திய சிறைச்சாலை, சுந்தர் ராஜன் நகர், ஜே கே நகர், செம்பட்டு, காஜாமலை EB காலனி, பழைய காஜாமலை, ரங்கா நகர், சுப்ரமணிய நகர், வி.என் நகர், தென்றல் நகர், கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் EB காலனி, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர்,
எல்ஐசி காலனி புதியது, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த் நகர், கேகேநகர் மற்றும் சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட
32 மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால், ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 949
Comments are closed, but trackbacks and pingbacks are open.