Rock Fort Times
Online News

தாம்பரம், திருச்சி, நாகர்கோவிலில் இருந்து எந்த நாளில், எந்த நேரத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் புறப்படும்…!

தாம்பரம், திருச்சி, நாகர்கோவிலில் இருந்து எந்த நாளில், எந்த நேரத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரெயில்வே வாரியம் 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து சந்திரகாச்சிக்கு வாரந்தோறும் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் (16107) ஜன. 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.15 மணிக்கு சந்திரகாச்சியை அடையும். மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (16108) சந்திரகாச்சியில் இருந்து 24-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் காலை 9.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இதேபோல், திருச்சியில் இருந்து வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 5.45 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரெயில் (20610) 3-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நியூ ஜல்பாய்குரியில் இருந்து 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.45 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரெயில் 3-வது மாலை 4.15 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. மேலும், நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரெயில் (20604) 4-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், நியூ ஜல்பாய்குரியில் இருந்து 28-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4.45 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரெயில் (20603) 3-வது நாள் இரவு 11 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று( ஜன. 20) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்