தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 234 தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் உணவு… * அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்!
தமிழக துணை முதல்வர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர திமுக சார்பில் 234 மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கும் விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் நேற்று ( 28-11-2025 ) மாலை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி மற்றும் மாநகராட்சி மண்டலம்- 2ன் தலைவர் பி.ஜெயநிர்மலா ஆகியோர் தலைமை தாங்கினர்.

மண்டல குழு தலைவர் மற்றும் கிழக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கி சிறப்புரையாற்றினர். மேலும் விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாவட்ட கழக நிர்வாகிகள் என்.செந்தில், அ.த.த. செங்குட்டுவன், லீலாவேலு, பகுதி கழகச் செயலாளர்கள் மருந்து கடை மோகன், டி.பி.எஸ்.எஸ்.ராஜ் முகம்மது, ஏ.எம்.ஜி.விஜயகுமார், ஆர்.ஜி.பாபு, மாமன்ற உறுப்பினர் கே.பன்னீர்செல்வம் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.


Comments are closed.