கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வார்டுகளில் திமுக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் திருச்சியில் நடந்த திமுக கூட்டத்தில் தீர்மானம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி வார்டுகளில் திமுக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது என பொன்னகர் பகுதி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மத்திய மாவட்டம் பொன்னகர் பகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருமண்டபத்தில் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மேற்குத் தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வார்டுகள் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து வார்டுகளிலும் திமுக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது ,பொன்னகர் பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, ரூ 600 கோடியில் டைட்டல் பார்க் மற்றும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த்,வட்டச் செயலாளர்கள் பி.ஆர்.பி.பாலசுப்ரமணியன்,மூவேந்திரன், தனசேகர், கவுன்சிலர்கள் ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா தேவி, கலைச்செல்வி மற்றும் பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர