Rock Fort Times
Online News

குருபூஜையை முன்னிட்டு மாவீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…!

மாவீரன் அழகு முத்துக்கோன் 268-வது குருபூஜையை முன்னிட்டு திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (06-07-2025) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஜி.எம்.வினோத் பாண்டி, அமைப்புச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிலதிபர் எஸ்.சேகர், காந்தி மார்க்கெட் வியாபார சங்க செயலாளர் ஜெ.மூர்த்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  அல்லூர் எழிலரசன், திருப்பூர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரத ராஜா, காங்கிரஸ் முன்னாள் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், தமிழ் மாநில யாதவர் மகா சபை நிறுவனர் எம். திருவேங்கடம், மாவட்ட திமுக துணை அமைப்பாளர் எஸ்.கே.செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்று வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் பூக்கடை சிவா, ராமச்சந்திரன், சேகர், மூர்த்தி, பழனிவேல், சிவக்குமார், மணி, முத்துசாமி, ரங்கராஜ், கணேசன், மாரியப்பன் கலியபெருமாள், செல்வம், கருப்பையா முருகானந்தம், பிரகாஷ், துரைசாமி, திலீபன், பூபாலன், சிவா, ஹரி, ஈஸ்வரன், கார்த்தி, சதீஷ் பாண்டி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்