Rock Fort Times
Online News

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணி! 1,175 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது !

நாடு முழுவதும்  விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண் டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் பக்தர்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பர். சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே  பிரதிஷ்டை செய்ய வேண்டும். அனுமதியளிக்கும் இடத்தில் தான் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும் என்று அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி புறநகர் மற்றும் மாநகரில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளை பக்தர்கள் செய்து வருகின்றனர். திருச்சி மாநகர் பகுதியில் 242 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் இன்று மாலை முதல் அந்தந்த இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வருகிற 9 ந்தேதி சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று காவிரியில் கரைக்கப் பட உள்ளது. பீடத்துடன் சேர்த்து 10 அடி உயரத்துக்குள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். ஊர்வலத்தின்  போது போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். சிலைகளை அமைதியாக ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க வேண்டும் என்று திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் என்.காமினி உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாநகரில்  1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதேபோல், திருச்சி புறநகரில் 932 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய எஸ்பி வருண்குமார் அனுமதி வழங்கி உள்ளார். அவரது தலைமையில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டம், மாநகரில் 1,174 சிலைகள் பிரதிஷ்டை செய் யப்படுகிறது.ஒரு விநாயகர் சிலைக்கு இரண்டு போலீசார் விதம் நாளை முதல் மூன்று நாட்கள் 24 மணி நேரமும் ஷிபட் முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்