Rock Fort Times
Online News

தீபாவளியை முன்னிட்டு திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயில் திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நிற்கும்: தெற்கு ரெயில்வே…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 06190/06191) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை (புதன்கிழமை) திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்றுசெல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்