தீபாவளியை முன்னிட்டு ‘சத்தியம் அறக்கட்டளை’ சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்:* அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!
தீபாவளியை முன்னிட்டு ‘சத்தியம் அறக்கட்டளை’ சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி, புத்தூர் வெக்காளியம்மன் திருமண மண்டபத்தில் அக்டோபர் 12ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை சத்தியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கே.அமாவாசை வரவேற்றார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, அந்தநல்லூர் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் விளிம்பு நிலை மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான புத்தாடைகள், அரிசி -பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சத்தியம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.