அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் அவரது சிலைக்கு நாளை (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை…- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை !
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ”சமத்துவநாள் உறுதிமொழி” ஏற்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், இ.பி.ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு நாளை காலை 8-30 மணிக்கு கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், பி.எம்.சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதன் தொடர்ச்சியாக “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்கப்படுகிறது. இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, கிளை செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழகத்தினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.