அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாளை (ஏப்ரல் 14) மத்திய மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (14-04-2025) காலை 8 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு திமுக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் க.வைரமணி தலைமையிலும், மாநகர செயலாளர், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதனைதொடர்நது காலை 8.30 மணியளவில் தில்லை நகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்திலும் அம்பேத்கர் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபடுகிறது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு மரியாதை செலுத்திட வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.