Rock Fort Times
Online News

திருச்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு…!

தமிழகம் முழுவதும் வாரந்தோறும்  திங்கட்கிழமைகளில்  அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை.
இதற்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக குறைதீர்க்கும் பெட்டி வைக்கப்பட்டது.  இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இன்று(10-06-2024)  குறை தீர்க்கும்  நாள் கூட்டம் நடைபெற்றது.   அதேபோல  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.  அப்போது திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த செல்வி ( வயது 60 )  என்ற பெண் தனது இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் வருமானம் இன்றி வறுமையில் வாடுவதாகவும் மாதாந்திர வருமானத்திற்கு உதவி செய்யுமாறு கோரி மனு அளித்தார்.  அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.  இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாவட்ட ஆட்சியர், மயங்கிய பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்தார்.  பின்னர், அப்பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
**

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்