திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளானது, இயற்கைக்கும் உழைப்பிற்கும் நன்றி கூறும் திருநாளாகவும், சமூக வேறுபாடுகளை மறந்து, “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற உயரிய தமிழர் சிந்தனையை நடைமுறையில் வெளிப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது, இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 14.01.2026( புதன்கிழமை) அன்று பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது. விழாவில் பொதுமக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், சமத்துவ பொங்கல் விழா நடைபெறும் நாளன்று மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெறவிருப்பதால், சுய உதவிக்குழுவில் உள்ள அனைத்து பெண்களும் கோலப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.