Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், 1000 மகளிருக்கு அஞ்சலக சேமிப்புத் திட்ட வைப்புத் தொகை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்…!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டலக்குழு தலைவருமான மு.மதிவாணன் முன்னிலையில், 16-வது வார்டுக்கு உட்பட்ட 1000 மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை செலுத்தி அதற்கான அட்டை வழங்கும் விழா நடைபெற்றது . இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மகளிருக்கு சேமிப்பு வைப்பு தொகை அட்டையை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர காரணாக இருந்தவர்கள் பெண்கள். எனவேதான், திமுக அரசின் திட்டங்கள் அனைத்தும் குடும்பத் தலைவியாக உள்ள மகளிரை முன்னிலைபப்டுத்தி செயல்படுத்தப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடனேயே மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, மகளிருக்கு மாதந்தோரும் ரூ.ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. தாய்-சேய் நலன் காக்க ஊட்டச்சத்துடன் கூடிய சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சேமிப்பு பழக்கம் மகளிருக்கு மிகவும் அவசியமானது. சிக்கலான தருணங்களில் சேமிப்பு கை கொடுக்கும். இந்த வகையில் துணை முதல்வர் பிறந்தநாளுக்காக ஆயிரம் மகளிருக்கு அஞ்சலசேமிப்பு கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் தலா ரூ.100 வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மகளிர் தொடர்ந்து தங்களது பங்களிப்பை செலுத்தி பயன்பெற வேண்டும் என்றார். இந்நிகழ்வில் திருச்சி தலைமை அஞ்சலக முதுநிலை அதிகாரி ராஜ்குமார், துணை அஞ்சலக அதிகாரி சீனிவாசன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் ஏ. எம்.ஜி.விஜயகுமார், வட்டக் கழகச் செயலாளர்கள் தங்கவேலு, சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்