சுதந்திர போராட்ட தியாகி அருணாசலம் பிள்ளை பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் – தியாகி அருணாச்சலம் நூற்றாண்டு விழா குழு இணைந்து மெயின்கார்ட்கேட் பகுதியில் உள்ள அருணாசலம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இ.வேலுசாமி,வி.சந்திரன் திலகர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி ஆகியோர் தியாகியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஜி.கே. முரளி, சேவாதள முரளி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வி.பட்டேல், சேகர் பாலன், பொன்னன், விஸ்வநாதன், ஆபிரகாம், இன்ஜினீயா் மோகன்ராஜ், செல்வ ரங்கராஜன், முகுந்தன், கு.பிச்சுமணி, கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், இளைஞர் காங்கிரஸ் உறையூர் கிருஷ்ணன், முஹமது ரஃபி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வி.பட்டேல், எழிலரசன், பேங்க் முருகேசன், முருகானந்தம், அன்பழகன், சேகர் பாலன், விஸ்வநாதன், சத்தியநாதன், சேகர்பாலன், வட்டார நிர்வாகிகள் செல்வராஜ், கருணாகரன், மாவட்ட துணை அமைப்பின் தலைவர்கள் சரவணன், INTUC ராகவேந்திரா கலைபிரிவு, வின்சென்ட், SC பிரிவு பாக்கியராஜ், சேகர், ரியாஸ் மற்றும் கோட்ட நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.