பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…* 25க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்!
சென்னையில் இருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. இன்று(18-07-2026) அதிகாலை அந்த பேருந்து பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தி, அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக கீழே இறங்கச் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி, எரிய தொடங்கியது. தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் பேருந்து முழுவதும் தீயில் இருந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

Comments are closed.