விருதாச்சலம் அருகே திருச்சி ரெயில் முன் பாய்ந்த மூதாட்டி…
என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினார்...
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ( 12.10.2023 ) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது விருதாச்சலம் ரெயில் நிலையத்திற்கு முன்பாக 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி தன் உயிரை மாய்த்துக்கொள்ள ரெயில் முன்பு பாய்ந்தார். அப்போது ரெயில் டிரைவர் சாதுா்யமாக ரெயிலை பிரேக் போட்டு நிறுத்தினார். இதையடுத்து மூதாட்டி சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த விருதாச்சலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ரெயில் நிறுத்தப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் மூதாட்டியை காப்பாற்றிய ரெயில் என்ஜின் டிரைவரை பயணிகள் பாராட்டினார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.