திருச்சியில் ஆக்கிரமிப்பு கடைகள் திடீர் அகற்றம்….
போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை...
திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகார்கள் கூறப்பட்டது .இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஆக்கிரப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், சுகாதார ஆய்வாளர் பிரின்ஸ் சகாயராஜ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் உதவியுடன் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர் . திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் உள்பகுதி, , வில்லியம்ஸ் ரோடு, பாரதிதாசன் ரோடு, ராக்கின்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து உள்ள கடைகள் அகற்றப்பட்டன. ஜேசிபி எந்திரம், இரண்டு லாரிகள் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலை மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.