தமிழகத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரத்தன் , சங்கர்என்ற பிரபல கொள்ளையர்களான இவர்கள் மீது திருச்சி கன்டோன்மென்ட், உறையூர் மற்றும் மதுரை காவல் நிலையங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளது. மேலும் விசாரணையில், அவர்கள் கொள்ளையடித்த சுமார் 250 சவரனுக்கும் அதிகமான நகைகளை பதுக்கி வைத்திருக்கக் கூடிய இடங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இரண்டு குற்றவாளிகளும் தாங்கள் கொள்ளையடித்த நகைகளை மறைத்து வைத்திருந்த இடங்களைப் பற்றி தொிவித்த நிலையில், திருச்சி மாநகர காவல் துறை உதவி ஆய்வாளர் உமா தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்ததுடன் அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனா்.

