நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு அதிகபடியான மழையை தரக்கூடிய பருவமழையாக வடகிழக்கு பருவமழை உள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு பெய்யக்கூடும். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(அக்.14) வெளியிட்ட அறிவிப்பில், நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் (2 நாட்களில்) தொடங்கும் என தெரிவித்திருந்தது. வடகிழக்கு பருவமழை வருகிற 16 அல்லது 18ம் தேதிவாக்கில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை வங்கக்கடலின் மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் தொடங்கும். 2 நாட்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை நாட்கள் செல்ல செல்ல தீவிரமடையும். தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும். வடதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் போன்ற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments are closed.