Rock Fort Times
Online News

இபிஎஸ் உடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது: பா.ஜனதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு-டிடிவி தினகரன்…!

அ.ம.மு.க.பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் இன்று (11-03-2024) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக இளைஞர்களின் அரசு பணி கனவை சிதைத்து அவர்களின் எதிர்காலத்தை அடியோடு குலைக்கும் திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு
நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறோம். அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடும். திருச்சி, தஞ்சை, சிவகங்கை தொகுதிகளில் போட்டியிடுகிறீர்களா? என கேட்கிறார்கள். நான் (டிடிவி தினகரன்) எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் வந்தால் அவருக்கு நீங்கள் பிரசாரம் மேற்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், துரோக சிந்தனையோடு இருக்கும்
எடப்பாடி பழனிசாமியோடு எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது. ஆனால், அவர் தனது துரோக சிந்தனையை மறந்து நல்ல மனிதராக திருந்தி வந்தால் அவருக்காக பிரசாரம் செய்வது பற்றி யோசிப்போம். ஆனால், அது போன்ற வாய்ப்பு இருக்காது என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்