தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், தவெக அவர்களுடன் கூட்டணி, இவர்களுடன் கூட்டணி என திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். தவெக யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. மக்களுடன் மட்டும் தான் எங்களுக்கு கூட்டணி. மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதில் பின்வாங்கும் பேச்சுக்கே எப்போதும் இடமில்லை. யாருடனும் எதற்காகவும் தவெக சமரசம் செய்துகொள்ளாது. அதை உறுதியாகவே உங்களிடம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதன்மூலம் அவர் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை உறுதி பட தெரிவித்துள்ளார்.

Comments are closed.