கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை தீவிரமடைந்து வருகிறது . தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுடன் எந்த வகையிலும் தொடர்பில் இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்து சந்தேகிக்கும் நபர்களின் வீடு மற்றும் அவர்களது சமூக வலைதளங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று ( 09.05.2023 ) காலை 6.15 மணிக்கு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்தடைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முகமது அசாப் என்கிற பயணியை விமான நிலைய வாயிலில் மடக்கி பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.