Rock Fort Times
Online News

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி தேர்வு…!

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவி வகிக்கிறார். இவர், மார்ச் 5ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு பிறகு, யாரை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று முடிவெடுக்க, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கூட்டம் நடந்தது. இதில், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கொலீஜியம் கூட்டத்தில், இன்னும் ஒரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நீதிபதியானவர், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே அந்த நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்படலாம். இரண்டு மாத காலத்துக்கு முன்னதாக அவரை பணியிட மாறுதல் செய்யலாம். அதன் மூலம், தான் பதவியேற்பதற்கு முன்னதாகவே, அந்த நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்ட நீதிபதி நன்கு அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்கை முடிவின்படி, ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி லிசா கில், முன்னதாகவே ஆந்திரா நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்