திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள்… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி , சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(06-04-2025) மாலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் விடியல் பேருந்து மற்றும் திருப்பூர், சென்னை, தஞ்சாவூர் தேனீர்பட்டி, துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் புறப்பட்டு சென்றன. பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21ம் தேதி வரை தொடக்கப் பள்ளிகள் தேர்வுகள் நடைபெற உள்ளதாக இருந்தது. தற்போது அதனை வருகிற 17-ம் தேதியுடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் அறிவுரையின்படி எல்லா இடங்களிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து தமிழக முதல்வரின் அறிவுரைப்படி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். புதிய பேருந்துகள் தொடக்க விழா நிகழ்ச்சியின் போது கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு .மதிவாணன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் கட்சி நிர்வாகிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
Comments are closed.