திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா- கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு…!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்கேற்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். அவனைத்தொடர்ந்து தியாகிகளை கௌரவப்படுத்தி விழா பேருரை ஆற்றினார். முன்னதாக 9 நவகிரகங்கள் மற்றும் அதற்கான தல விருட்ச மரங்கள் உள்ள பூங்காவை திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வம் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.