மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் ( 07.05.2023 ) பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் சுமார் 1/2 லட்சம் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ‘நீட்’ தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 12 மையங்களில் நடக்கிறது. மொத்தம் 7,799 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.