திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45 ). எலக்ட்ரீசியன்.இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் உள்ள 2-வது மாடிக்கு செல்வகுமார் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.