Rock Fort Times
Online News

துறையூர் அருகே இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது…!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் முத்து. விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தார். தாட்கோ மூலம் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மின் இணைப்பு வழங்க கால தாமதமானதால் பிப்ரவரி 27ம் தேதி செங்காட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இளமின் பொறியாளர் ராஜு என்பவரை சந்தித்து இலவச மின் இணைப்பு வழங்க கேட்டுள்ளார். அதற்கு அவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்து, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, முத்துக்கு சில அறிவுரைகள் வழங்கினர். அதன்படி, அவர் லஞ்சப் பணத்தை துறையூர் மின்வாரிய அலுவலகத்தில் வைத்து இள மின் பொறியாளரிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்