Rock Fort Times
Online News

பெரம்பலூர் அருகே போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்களின் கார் பறிமுதல்’…* மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தகவல்!

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை அருகே குற்றவாளிகளை வேனில் அழைத்துச் சென்றபோது 2 காரில் வந்த மர்ம கும்பல் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றது. இதில் 3 போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறுகையில், “ரவுடி வெள்ளை காளியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல் துறை பாதுகாப்பில் அழைத்து வரப்பட்ட குற்றவாளியை பின்தொடர்ந்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களின் காரை கடலூர் அருகே பறிமுதல் செய்துள்ளோம். திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூரில் காரை நிறுத்திவிட்டு வேறு காரில் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்