Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே ரூ.84 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 3 பேர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலையம் அருகே மொபைல் போன் கடை வைத்திருக்கும் தங்கம் என்ற தங்கவேல் மற்றும் அவரது கடைக்கு காரில் வந்த இருவர், கள்ள நோட்டுகளை மாற்ற வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடத்திய சோதனையில், 42 கட்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் மொத்தம், 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிப்பட்டன. கள்ளநோட்டுகளை கொடுக்க வந்த, கோயம்புத்தூர் கே.கே.புதூரை சேர்ந்த பார்த்தசாரதி, கணுவாயை சேர்ந்த டிரைவர்சதீஷ், கள்ள நோட்டுகளை வாங்கிய வையம்பட்டி மொபைல் போன் கடை உரிமையாளர் தங்கவேல் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவா்கள்  பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணையில் கள்ள நோட்டுகளை கேரளாவை சேர்ந்த பட தயாரிப்பாளர் வினோஜ் என்பவர் கொடுத்ததாக கூறுகின்றனர்.

 

1 Comment
  1. mitolyn official says

    **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்