பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று( மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல திருச்சி, மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி, ஜெ.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல், எஸ்.வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், ஆர்.மனோகரன், மாநில இளைஞர் அணி செயலாளர் என்.ஆர்.சிவபதி மற்றும் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் கே.கே.ஒண்டிமுத்து,அஞ்சாநெஞ்சன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், பா.செந்தில்நாதன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கா.உமாநாத், மா.பிரின்ஸ், பி.கே.திலீப்குமார், மு.கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் என்.ரவி, என்.குணா, கே.டி.தனபால், கே.வி.ஜி.ரவீந்திரன்,ஜி சிவராமன், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழக தலைவர் ஆர்.வி.பரதன், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கருணாகரன், செல்வகுமார், பி.மதியழகன், சதீஷ்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் பி.பிரபாகரன், சோழப் பேரரசு கட்சி நிறுவனர் என்.சரவணன், புரட்சி பாரதம் கட்சி இளம் ஆதி அறிவுடைநம்பி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


Comments are closed.