Rock Fort Times
Online News

திருச்சியில் என்.சி.சி மாணவா்களுக்கு பாராட்டு விழா

குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற என்சிசி மாணவ மாணவிகளுக்கு நேற்று திருச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது. டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த குடியாசு தினவிழா அணிவகுப்பில் திருச்சி மண்டல என்சிசி சார்பாக கலந்து கொண்ட தேசியமாணவர்படை மாணவ, மாணலிகளுக்கும், அகில இந்திய அளவில் பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற மாணவ மாணலிகளுக்கும், கடந்தாண்டு தேசிய மாணவர் படையில் இருந்து பல சாதனைகள் படைத்த இதர மாணவ, மாணவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய என்சிசி படை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி மண்டல எசி கமாண்டர்,கா்னல் கனில் பட் விழாவிற்கு தலைமையேற்று சாகனையாளர்களுக்கு விருது, பாராட்டு சான்றிதழ் கேடயம்,நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் கர்னல ரஜினிஜ், கா்னல் கோஸ்ஸாமி, கர்னல் சஞ்சீவதராணா,கர்னல் சந்தீப் மேனன், கர்னல் சந்திரசேகர், விங் கமாண்டர் அபிசேக், லெப்டினன்ட கா்னல் அருண்குமார் மற்றும் லெப்டினன்ட் கர்னல் அஜய்குமார் உள்பட பல்வேறு பட்டாலியன்களை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்