திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 500 மாணவ- மாணவிகள் பங்கேற்ற என்சிசி முகாம்…! * துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிப்பு
தமிழ்நாடு இரண்டாவது பட்டாலியன் சார்பாக திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட வருடாந்திர பயிற்சி மே 15-05-2025 அன்று தொடங்கியது. இந்த பயிற்சி மே 24 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கல்லூரி மற்றும் பள்ளிகளை சார்ந்த 500 என்சிசி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், அணிவகுப்பு, பேரிடர் மேலாண்மை, அவசரகால கொட்டகை அமைத்தல், தடைகள் தாண்டுதல், கலை நிகழ்ச்சி, போர் காலத்தை கையாளுதல், சிறந்த திறன்மிக்க மாணவ, மாணவியரை உருவாக்குதல் மற்றும் இந்திய குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு இரண்டாம் பட்டாலியன் தலைமை அதிகாரி கர்னல் பி.கே.வேலு மற்றும் ஜமால் முகமது என்சிசி மாணவர் படை அதிகாரி மேஜர் முஜாமில் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Comments are closed.