இந்தியாவின் 79- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி அரசு சட்டக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பட்டாலியன் 2 என்சிசி சார்பில் கல்லூரி வாயிலில் இருந்து ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக தேசிய கொடி பேரணி நடைபெற்றது.இதில், தமிழ்நாடு பட்டாலியன் சுபைதார் முத்துக்குமார் மற்றும் நாயக் சுபைதார் இமானுவேல் மற்றும் என்சிசி கேடட்கள், என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.கல்லூரி முதல்வர், பேராசிரியர், முனைவர் எம். ராஜேஸ்வரன் பேரணியைத் தொடங்கி வைத்தார்.பேரணியில் பங்கேற்ற அனைத்து என்சிசி கேடட்களும், மாணவ மாணவிகளும் ” பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்துடன் மூவர்ணக் கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர். பின்னர், கல்லூரியை பேரணி வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை இணை என்சிசி அதிகாரி ஜி. சாந்தா ஷீலா சிறப்பாக செய்திருந்தார்.
Comments are closed.