புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதை பொருட்கள் அதிக அளவு இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இறால் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப் பொருட்கள் மற்றும் 874 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுல்தான் என்பவரை தேடி வருகின்றனர். இந்த போதைப் பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில் இதனை அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டையில் தற்போது ரூ.110 கோடிக்கு போதைப் பொருட்கள் சிக்கி உள்ளது தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.