Rock Fort Times
Online News

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்து – 5 பெண்கள் பலி

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் புகழ்பெற்ற பொன்னர் – சங்கர் கோயிலில் மாசிபெறு திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான வேடுபறி வைபவம் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் காரில் சென்றுள்ளனா். ரவி என்பவரது மனைவி கவிதா காரை ஓட்டிச்சென்றுள்ள நிலையில் , அவருடன் 4 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் காரில் சென்றுள்ளனா். 7 பேரும் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் மீண்டும் திருச்செங்கோடு நோக்கி செல்லுகையில் பரமத்திவேலூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது இந்த கார் மோதியது. இதனை அடுத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா். மேலும் காரில் சென்ற 5 வயது குழந்தை மற்றும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு,படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சாலை விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது திருச்செங்கொடு சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்