திருச்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் வழங்கினர் !
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று (ஜன.31) நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்ததோடு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் குமாரவேல், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கோபிநாத், மாநகராட்சி மண்டல தலைவர் மு.மதிவாணன் மற்றும் அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.