குஜராத் விமான விபத்தில் மர்மம் நீடிப்பு ! உயிர் பிழைத்த அந்த ஒரே ஒரு நபர் சொல்வது உண்மையா ?- நடுவானில் நடந்தவை குறித்த பரபரப்பு தகவல்கள்
குஜராத் மாநிலம், ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜூன் 12-ம் தேதி புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள் 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர். ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதி மற்றும் அங்குள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மேல் விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் இருந்த 5 மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் அரிதினும் அரிதாக ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். அந்த விமானத்தில் இருந்த லண்டன் குடியுரிமை பெற்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் (வயது 45) என்பவர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவர் ஆமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானத்தில் எமர்ஜென்சி கேட் அருகே இருக்கும் 11- ஏ சீட்டில் அமர்ந்திருந்ததால் விமானம் விபத்துக்குள்ளாக போவதை அறிந்து எமர்ஜென்சி கதவை திறந்து கீழே குதித்து உயிர் தப்பியதாக அவர் பேட்டி கொடுத்துள்ளார். ஆனால், அவரது பேட்டியில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் கதவுகள் வெளி நோக்கித் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் கேபினுக்கும், வெளிப்புறக் காற்றுக்கும் இடையிலான அழுத்த வேறுபாட்டை தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட அந்த கதவை நினைத்த நேரத்தில் திறந்து விட முடியாது. தவிர அப்படி திறக்க வேண்டும் என்றாலும் அந்த கதவானது விமானத்தின் வெளிநோக்கி தான் செல்லுமே தவிர உள்நோக்கி வராது. அவ்வாறு அந்த கதவை திறந்தால் வெளியில் உள்ள காற்று விமானத்தினுள் வந்து விமானத்தை தாறுமாறாக தாக்கி நிலைகுலைய செய்து விடும். இதனால், நடுவானில் விமானம் பறக்கும்போது அவற்றை திறந்து குதிப்பது சாதாரண விஷயமல்ல. முறையான பயிற்சி இல்லாமல் விமானம் பறக்கும்போது அந்த கதவை திறக்க சாத்தியமில்லை. அவசர வழி கதவை பயன்படுத்தும் லீவரை பிடித்து இழுக்கும்போது விமானியின் அறையில் உள்ள விமானிக்கு எச்சரிக்கை கொடுக்கும். உடனடியாக பணிப்பெண்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்வார்கள்.
இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் தரை இறங்கிய விமானத்தில்தான் எமர்ஜென்சி கதவுகள் வேலை செய்யும். விமான விபத்தில் தப்பித்த நபர் பேட்டி கொடுத்திருப்பது போல் அவசர கதவை திறந்து குதிப்பது என்பது சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாமே தவிர நிஜத்தில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை உயிர் பிழைத்த ரமேஷ் பேட்டி கொடுத்தது போல் அவசர கதவை திறந்து இருந்திருப்பாரேயானால், அந்தக் கதவின் வழியாக உள் புகுந்த காற்று தான் விமான விபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். இதை தவிர குமாரின் உயிர் பிழைப்பில் மில்லியன் டாலர் கேள்விகள் இருக்கின்றன. ஏனெனில் கீழே விழுந்தவரின் ஆடையில் ஒரு கிழிசல் கூட இல்லை. விமானத்திலிருந்து விழுந்த பின்னும் செல்போன் அவர் கையை விட்டு எங்கும் போகவில்லை. விமான விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் குமார் எந்த பதட்டமும் இல்லாமல் அவரது தந்தைக்கு போன் செய்து என்ன நடந்தது என்பதை விலாவாரியாக விளக்கி இருக்கிறார். மிக பதட்டமான சூழ்நிலையில் இதெல்லாம் சாத்தியமா? வெறும் 25 அடி உயரத்தில் இருந்து குதித்தாலே எலும்புகள் நொறுங்குகின்ற சூழ்நிலையில் அதற்கு மேலான உயரத்தில் இருந்து குதித்த குமாருக்கு ஏன் கால்களில் எந்த இடத்திலும் சிறு சுளுக்கு கூட ஏற்படவில்லை? மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்த நபர் எந்த பதட்டமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடந்து செல்வதெல்லாம் நம்பக்கூடிய விஷயங்களாக தெரியவில்லை. எனவே, எமர்ஜென்சி கதவு குறித்து குமார் சொல்லும் கதையை அதிகாரிகள் அப்படியே நம்பாமல் ஆராய்ந்து பார்த்தால் அதற்கு பின்னே ஏதோ ஒரு மர்மம் புதைந்திருப்பது கண்டு பிடிக்கப்படலாம்.
Comments are closed.