Rock Fort Times
Online News

திருச்சி, பொன்மலையில் ஆசிரியரை மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த மர்ம நபர்கள்…!

திருச்சி, பொன்மலை அம்பேத்கார் திருமண மண்டப சாலையில் ரெயில்வே பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனத்தை பறித்து அதில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அந்த ஆசிரியர் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரயில்வே ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சியில் இருந்து பொன்மலை, பொன்மலைப்பட்டி, கீழக்கல்கண்டார் கோட்டை ஆகிய பகுதிகளுக்கு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜி கார்னர் வழியாகத்தான் பொதுமக்கள் செல்ல வேண்டும்.இந்த பகுதிகளுக்கு இரவு நேரங்களில் செல்லும்போது அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. தற்போது பகல் நேரத்திலேயே வழிப்பறி நடந்துள்ளது. ஆகவே, இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்